மனம் மாறிய இயக்குனர்!

Webdunia
வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (16:22 IST)
மிருகம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது கன்னத்தில் அறைந்தார் என இயக்குனர் சாமி மீது பத்மப்ரியா இயக்குனர் சங்கத்தில் புகார் செய்ய, இதை விசாரித்த இயக்குனர் குழு சாமியை ஓராண்டுகள் படம் எதுவும் இயக்கக்கூடாது என்று தடை விதித்தது.

அதற்குப் பின்னால் படம் ரிலீஸாகி நன்றாக ஓடவும் நான்கே மாதத்தில் தடையை நீக்க உத்தரவிட்டது இயக்குனர் சங்கம்.

ஸ்பாட்டில் சற்று கோபமாக நடந்துகொள்ளும் சாமி தற்போது தன்னை மிகவும் மாற்றிக் கொண்டுள்ளார். இனிமேல் யாருடனும் பிரச்சனை செய்வதில்லை என்று உறுதி செய்துகொண்டவர் தற்போது 'சரித்திரம்' என்ற படத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார்.

இந்தப் படத்திலும் 'மிருகம்' ஆதிதான் ஹீரோ. இவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவிகா நடிக்கிறார். இதில் ஆதியின் அப்பாவாக ராஜ்கிரண் நடிக்கவிருக்கிறார். ஏகப்பட்ட படங்களில் நடித்த சித்தாரா, ராஜ்கிரண் ஜோடியாக சேர்ந்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக்க ஷோபனா, சுகன்யா, ரேகா என பல முன்னாள் நாயகிகளிடம் கேட்டு ஒப்புக்கொள்ளாததால் சித்தாராவை தேடிப் பிடித்திருக்கிறார் சாமி.

சாமி, சொன்ன சொல்லை காப்பாத்துங்க. ஸ்பாட்டில் டென்ஷனாகி யாரையும் அடித்துவிடாதீர்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்வதிக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.. பிக்பாஸ் கொடுத்த ரெட் கார்டுக்கு நெட்டிசன்கள் வரவேற்பு..!

பராசக்தி திரைப்படம் சிவகார்த்திகேயனின் ‘பாட்ஷா’.. இயக்குனர் ஆர்.கண்ணன் பேச்சு..!

"தடைகளைத் தாண்டி வரும் பராசக்தி": சுதா கொங்கரா நெகிழ்ச்சி - பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

கனி வெளியேறியபோது வருத்தப்பட்ட ரசிகர்கள் பாரு வெளியேறிய போது கொண்டாடுகின்றனர்.. இதுதான் பிக்பாஸ்..!

ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பாரு, கம்ருதீனுக்கு 90 நாள் சம்பளம் கிடையாதா? துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!

Show comments