Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குசேலன் என்றால் பிரச்சனை என்றும் அர்த்தம்!

Webdunia
புதன், 20 ஆகஸ்ட் 2008 (20:49 IST)
குசேலன் படம் வெளியாகியும் அதன் பிரச்சனை ஓய்ந்த பாடில்லை. படம் தொடங்கப்பட்டவுடன் 'நான் பதினைந்து சதவ ி‌க ிதம்தான் வருவேன். அதனால் இது என் படம் இல்லை, பசுபதியின் படம் என்று பேட்டி கொடுத்து இயக்குனர் வாசுவுக்கு ஷாக் கொடுத்தார் ரஜினி. அதற்குப்பின் யார் யாரோ ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக பேச்சு அடிபட்டு அடங்கியது.

அதற்குப்பின் ஒகேனக்கல் பிரச்சனையால் கர்நாடகத்தில் குசேலனை ஓடவிடமாட்டோம் என்று கன்னட அமைப்பினர் போர்க்கொடி தூக்க, அதற்கு அவர் மன்னிப்பு கேட்க, தமிழக ரசிகர்கள் சிலர் கொந்தளித்து ரஜினி பேனர்களைக் கிழத்தார்கள்.

அதுமட்டுமா... தற்போது குசேலனால் பல கோடி நஷ்டம், அதற்கு பாதி பணம் திருப்பித் தரவேண்டும் என்று சில விநியோகஸ்தர்கள் ஒன்று கூடி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி இந்தப் ‌ பி ரச்சனைகள் எல்லாம் போதாதென்று நடிகை மீனாவும் வாசுவோடு பிரச்சனை பண்ணிக்கொண்டு இருக்கிறார்.

நான் எப்போதைய நடிகை, எவ்வளவு பேருக்கு சீனியர். என் பெயரை டைட்டிலில் இரண்டாவதாக (நயன்தாராவுக்கு அடுத்து) போட்டது மட்டுமல்லாமல் போஸ்டரில் கூட என் முகத்தை போடுவதில்லை என்று ஏகத்துக்கு திட்டிக் கொண்டிருக்கிறார் கண்ணழகி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments