இனி நான் ராசியான ஹீரோ!

Webdunia
புதன், 20 ஆகஸ்ட் 2008 (13:54 IST)
அருண் விஜய் இளமையான நல்ல நடிகர் என்றாலும், ராசியில்லாத நடிகர் என்ற அவப்பெயரை உடைக்க படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.

சேரனின் 'பாண்டவர் பூமி'யில் அற்புதமான கேரக்டர். அதற்குப் பின் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்தும் சரியாக போகவில்லை. இயக்குனர் மஜித் இயக்கிய 'துணிச்சல்' படம் நன்றாக வந்தும் படம் இன்னும் ரிலீசாகவில்லை.

ஒரு நல்ல படத்திற்காக காத்திருந்த இடைவெளியில் நியூயார்க் சென்று டைரக்சன் படிப்பை முடித்துக்கொண்டு வந்திருக்கிறார்.

இதற்கிடையில் அருண் விஜய் மாமனார் என்.எஸ். மோகனும், சேனல்-9 என்ற நிறுவனமும் இணைந்து ஒரு பிரமாண்டமான படம் ஒன்ற ை‌த் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறது. இதில் கால்டாக்ஸி டிரைவராக அருண் விஜய் நடிக்க இருக்கிறார்.

அதற்குமுன் தனது தந்தை 'நாட்டாமை' விஜயகுமார் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். இப்படிப்பட்ட நல்ல விஷயங்கள் கை கூடி வரக்காரணம் அருண்குமார் என்ற தனது பெயரை அருண் விஜய் என்று மாற்றியதுதான் என்று சொல்லி வருகிறார்.

எது எப்படியோ... ஒரு நல்ல முன்னணி நடிகர் வரிசையில் இடம்பெற்றால் சரி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவை விட்டு போனா அந்த வேலையை செய்வேன்!.. பஹத் பாசில் ஓப்பன்..

ஏன் விஜய் வாயை திறக்கல? பூகம்பமாகும் த்ரிஷா விவகாரம்.. எங்க போய் முடியப் போகுதோ?

தமிழக அரசு விருதை வாங்க மறுத்த வெற்றிமாறன்!.. நடந்தது என்ன?

நீங்க கதையே சொல்ல வேணாம்!. நான் நடிக்கிறேன்.. லோகேஷ் கனகராஜூ

சூர்யாவுடன் இணையும் டிராகன் பட இயக்குனர்!.. புதுப்பட அப்டேட்!...

Show comments