பட்ஜெட் பற்றி கவலையில்லை எனும் தயாரிப்பாளர்!

Webdunia
திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (19:58 IST)
தமிழ்ப் படங்களுக்கு பெரும்பாலும் இசையமைக்க ஒப்புக்கொள்வதில்லை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.

பிரபலமான இயக்குனரகள் இசையமைக்க கேட்டும் கூட ஒப்புக்கொள்ளாத ரஹ்மான், தற்போது இசையமைத்த 'சக்கரக்கட்டி' பாடல்கள் ஹிட்டானதால் இன்னும் பல இயக்குனர்கள் மொய்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்தப் படத்துக்காக கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தார் இயக்குனர் கலாபிரபு.

அப்படி காத்திருந்து வாங்கிய மொத்தப் பாடல்களில் 'டாக்ஸி' என்ற பாடல் மிகப்பெரிய அளவில் பேசப்படுவதால், ஏற்கனவே எடுத்து முடித்திருந்த அப்பாடலை மீண்டும் ' ஷ ூட்' பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பாடலுக்காக படம் வெற்றி பெறும் என்று நம்பிக் கொண்டிருந்த இயக்குனரின் கனவு நிறைவேறப் போகும் சந்தோஷத்தில் இருக்கிறார்.

ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு மேல் பணம் செலவாகியும், டாக்ஸி பாடலை ரீ-ஷூட் செய்ய சம்மதித்திருக்கிறார் தயாரிப்பாளர் தாணு. பின்னே தன் மகனின் ஆசையைக் கூட நிறைவேற்றவில்லை என்றால் எப்படி. கூந்தல் உள்ளவள் அள்ளி முடிக்கிறாள். பணம் உள்ளவர் செலவு செய்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஐ தொழில்நுட்பத்தில் மீண்டும் உயிர் பெற்ற கோச்சடையான்.. மிரட்டல் டீசர் வெளியீடு..!

காதலர் தினம் படத்தில் அஜித் நடிக்க வேண்டியதா? தயாரிப்பாளர் சொன்ன ஷாக் தகவல்

ரஜினியின் கடைசிப்படம் இதுதான்!.. ரசிகர்களை அப்செட் ஆக்கிய அப்டேட்!...

பிரபல நடிகையை கழிவறையில் ரகசிய வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் போட்ட மர்ம நபர்.. அதிர்ச்சி தகவல்..!

லைகாவிடம் பெற்ற கடன் குறித்த வழக்கு: நடிகர் விஷாலின் மனு தள்ளுபடி..!

Show comments