ரீ-ஷூட் செய்யப்படும் சக்கரக்கட்டி பாடல்!

Webdunia
வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (20:33 IST)
பைவ் ஸ்டார் ஹோட்டல் டிஸ்கொதே முதல், முச்சந்தி டீக்கடை வரை எங்கும் ஒலிக்கிறது ரஹ்மானின் டாக்சி... டாக்சி...! சக்கரக்கட்டி படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்டது. அதனை மீண்டும் எடுக்கிறார் இயக்குனர் கலாபிரபு.

பாடல் பிரபலமானால் அதனை மீண்டும் எடுப்பது தமிழ் சினிமாவில் புதிதல்ல. காதலில் விழுந்தேன் படத்தில் இடம்பெறும் நாக்க முக்க பாடல் ஹிட்டானதால், ஏற்கனவே எடுத்த பாடல் காட்சியை நீக்கிவிட்டு அதிக பொருட் செலவில் அதே பாடலை ரீ- ஷ ூட் செய்கின்றனர்.

சக்கரக்கட்டி டாக்சி... டாக்சி... பாடல் எக்குதப்பாக ஹிட்டானதால், ஏற்கனவே எடுத்த பாடல் காட்சியை நீக்கிவிட்டு பாடலின் பாப்புலாரிட்டிக்கு தகுந்த பணத்தைப் போட்டு பாடலை மீண்டும் எடுக்கிறார்கள்.

எடுப்பது கலாபிரபு... பணம் கொடுப்பது அவரது அப்பா தயாரிப்பாளர் தாணு. பாடலை என்ன... படத்தையே ரீ- ஷ ூட் செய்யலாம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

ரஜினி படம் ஸ்டார்ட்!.. போட்டோ போட்டு செம ஹைப் ஏத்துறாங்களே!...

Show comments