முதல்வர் கலந்துகொள்ளும் சிவாஜி பிறந்தநாள் விழா!

Webdunia
வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (17:38 IST)
தஞ்சை - புதுக்கோட்டை சாலை மண்டபத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசலனின் சிலை அமைக்க அனுமதி கிடைத்துள்ளது. சென்னை கடற்கரை சாலையில் அமைக்கப்பட்ட சிவாஜி சிலையின் அதே வடிவத்தில், உயரத்தில் இந்த சிலை அமைக்கப்படுகிறது.

சிலையை கமல்ஹாசன் திறந்து வைப்பதாக இருந்தது. இப்போது திறந்து வைக்க இருப்பவர் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். வரும் 15 ஆம் தேதி சிலை திறப்பு விழா நடைபெறுகிறது.

அக்டோபர் 1 சிவாஜி கணேசனின் 80வது பிறந்தநாள். இதனை பிரமாண்டமாக கொண்டாட சிவாஜி குடுத்பத்தினர் விரும்புகின்றனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள முதல்வரிடம் கேட்டிருந்தனர். அவரும் தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார்.

தஞ்சையை தொடர்ந்து நாகர்கோவிலில், மதுரை, குமாரபாளையம் ஆகிய இடங்களிலும் சிவாஜி சிலை திறக்க ராம்குமாரும், மா. நடராஜனும் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வசூலை அள்ளும் தாய் கிழவி!.. 3 நாள் வசூல் அப்டேட்!..

கார் விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை தேவி பிரியா!... ஓட்டுனர் மரணம்!...

நிம்மதியாக உறங்க முடியவில்லை.. துபாயில் சிக்கி கொண்ட பிரபல நடிகையின் இன்ஸ்டா பதிவு..!

சிவகார்த்திகேயன் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை.. நடிகர் ஆரி ஆதங்கம்..!

சூர்யாவின் கையில் உள்ள கைக்குழந்தை யார்? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்..!

Show comments