என் பெயர் குமாரசாமி!

Webdunia
புதன், 13 ஆகஸ்ட் 2008 (20:38 IST)
அளவுக்கு மீறிய தாயன்பும், அப்பாவின் அதீத அன்பும் ஒரு இளைஞனின் வாழ்வை எப்படியெல்லாம் புரட்டிப் போடும் என்பதை சொல்லவரும் படம், என் பெயர் குமாரசாமி.

பல இயக்குனர்களிடம் உதவியாளராக பணிபுரிந்த ரத்ன சந்திரசேகர் படத்தை இயக்குகிறார். வீ. தஷி இசையில் இவர் எழுதிய ஆரிராரோ ஆரிராரோ... அன்னை மடியில் நானுறங்க என்ற பாடல், பி.சி. சபீஷ் பாட, ஏவி.எம். ஸ்டுடியோவின் ஆர்.ஆர். ஒலிப்பதிவு கூடத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

படத்தின் பிற பாடல்களை தாமரை, யுகபாரதி மற்றும் தொல்காப்பியன் எழுதுகின்றனர்.

புதுமுகங்களுடன் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் நடிப்பதாக தெரிவித்தார் ரத்ன சந்திரசேகர். புறச்சூழலே மனிதனின் வாழ்வியலை தீர்மானிக்கிறது என்ற வரிகளுக்கு உயிரூட்டுவதாக இப்படம் இருக்கும் என்றார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘ஜனநாயகன்’க்கு ஆதரவாக வாதாடும் வக்கீல் இந்த நடிகரின் உறவினரா? என்ன நடக்கப்போகுதுனு தெரியலயே

முழுக்க முழுக்க அதிகாரி அதிகார துஷ்பிரயோகம்.. ஜனநாயகன் பட பிரச்சனை குறித்து பிரபல இயக்குனர்..!

ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரம்: காங்கிரஸ் எம்பி கண்டனம்..!

’ஜனநாயகன்’ ரிலீசுக்கு முட்டுக்கட்டை.. விஜய்யின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?

நாளை விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் இல்லை.. அதிரடியாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்..!

Show comments