நடிகராகும் ஓவியர் வீர சந்தானம்!

Webdunia
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (20:18 IST)
பிறதுறை கலைஞர்கள் சினிமாவில் நடிப்பது அதிகரித்து வருகிறது. கவிஞர் விக்ரமாதித்யன், எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி, ஓவியர் அரஸ் இப்போது ஓவியர் வீர சந்தானம்.

அறிமுக இயக்குனர் மீரா கதிரவனின் அவள் பெயர் தமிழரசி படத்தில் வீர சந்தானம் முக்கிய வேடம் ஒன்றில் தோன்றுகிறார். படத்தின் நாயகன் ஜெய். படத்தின் நாயகி நவ்யா நாயர் என்று முன்பு சொல்லப்பட்டாலும், தற்போது அவர் இல்லை. வேறு நடிகையை தேடி வருகிறார்கள். மோசர் பேர் என்டர்டெய்ன்மெண்ட் படத்தை தயாரிக்கிறது.

P.G. முத்தையா படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் ஆண்டனி இசை. தேசிய விருது பெற்ற ராஜா முகமது எடிட்டிங். படத்துக்கு கலை இயக்குனராக பணிபுரிபவர் பிரபல ஓவியரான ட்ராஸ்கி மருது.

வரும் 15 ஆம் தேதி அவள் பெயர் தமிழரசியின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனுக்கு தேதி குறிச்சாச்சு! இந்த முறையாவது சொன்ன தேதியில் சாட்டைய வீசுவாரா?

பல்சரில் ஆவியா? ‘கருப்பு பல்சர்’ படம் எப்படி இருக்கிறது? இதோ விமர்சனம்

கல்கி 2 திரைப்படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. அவருக்கு பதில் தமிழ் நடிகையா?

ரஜினி - கமல் படத்தில் இணையும் பிரபலம்!.. அப்ப வேறலெவல்ல இருக்கும்!..

Show comments