பெயரை மாற்றினார் நிஷா கோத்தாரி!

Webdunia
புதன், 6 ஆகஸ்ட் 2008 (18:53 IST)
கார்த்தீகை படத்தில் மாளவிகாவுக்கு பதில் நடிக்கிறார் நிஷா கோத்தாரி. சட்டென்று பெயர் புரிபடாது. சரணின் ஜேஜே படத்தில் நடித்த அமோகா என்றால் உடனே தெரிந்துவிடும்.

அமோகாவை ராம்கோபால் வர்மா இந்தியில் அழைத்துக் கொண்ட பிறகு வைத்த பெயர் நிஷா கோத்தாரி. வர்மாவின் இயக்கத்தில் நடித்த பிறகு இவரது பெயர் பாலிவுட்டில் பிரபலம்.

அமோகாவாக இங்கிருந்து சென்றவர் கார்த்தீகையில் நிஷா கோத்தாரியாக திரும்பி வந்துள்ளார். இந்த இரு பெயர்களும் அவரது நிஜப் பெயர் கிடையாது. சினிமாவுக்காக வைத்த பெயர்கள். நிஜப் பெயர் பிரியங்கா.

இவரது தந்தைக்கு மகள் பெயரை மாற்றியதில் வருத்தம். தந்தையை மகிழ்விக்க தமிழில் மட்டும் பிரியங்கா என்ற பெயரில் நடிக்க உள்ளார் அமோகா என்கிற நிஷா கோத்தாரி என்கிற பிரியங்கா!

ஏற்கனவே 'வெயில்' பிரியங்கா இருக்கும் நிலையில் இவரை கார்த்தீகை பிரியங்கா என்று குறிப்பிட வேண்டிய நிலை. பெயர் மாற்றுவதற்கு அரசு ஏதேனும் தடை விதிக்கலாமே!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Kaalidas 2 : காளிதாஸ் 2 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: முதல் நாள் வசூலால் அதிர்ச்சியில் படக்குழு

விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!...

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

Show comments