கொள்கையை மாற்றிய நரேன்!

Webdunia
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (18:00 IST)
அர்னால்டு ஸ்வாஸ்நேகர், ஜாக்கி சான், நம்மூர் ரஜினி என உலகப் புகழ்பெற்ற நடிகர்கள் அனைவரும் ஆக்சன் ஹீரோக்களே! நேற்று நடிக்க வந்த நடிகர்களும் ஆக்சன் மகுடிக்கு மயங்க இதுவே காரணம்.

வெற்றியின் பாதையை முதல் படத்திலேயே தெரிந்துகொண்ட நரேன், ஆக்சன் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று அறிவித்தார். சொன்னபடி அவர் நடித்த மூன்று படங்களுமே ஆக்சன் படங்கள். தித்திப்பு என்றாலும் அளவுக்கு மீறினால் திகட்டத்தானே செய்யும்.

தனது ஆக்சன் கொள்கையை கொஞ்சமாக தளர்த்தியிருக்கிறார் நரேன். செல்வராகவனின் உதவியாளர் சொன்ன கதை நரேனை இம்ப்ரஸ் செய்துள்ளது. ஹியூமர் கலந்த வேடம், மதுரை பின்னணி!

நல்ல கதையை நழுவவிடுவானேன் என்று நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். 'பூக்கடை ரவி' என்ற அந்தப் படம் அடுத்த வாரம் தொடங்குகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'டிமான்டி காலனி - 3' படத்தின் முதல் பார்வை போஸ்டர் எப்போது? படக்குழு அறிவிப்பு..!

திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் உச்சகட்ட கவர்ச்சி.. ‘டாக்சிக்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

‘பருத்திவீரன்’ படத்தில் நடித்து பாட்டு பாடிய நாட்டுப்புற பாடகி காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

குலதெய்வ கோயிலில் மகளுடன் சாமி வழிபாடு செய்த அஜீத்.. வைரலாகும் புகைப்படம்..!

Show comments