சசிகுமார் கலந்து கொள்ளும் பயிற்சி பட்டறை!

Webdunia
சனி, 2 ஆகஸ்ட் 2008 (19:28 IST)
சென்னையை தொடர்ந்து மதுரையிலும் இந்த மாதம் 8 தேதி முதல் 14 ஆம் தேதி வரை குறும்பட - ஆவணப்பட பயிற்சி பட்டறை நடக்கிறது.

சென்னை பயிற்சி பட்டறையில் பாலுமகேந்திரா, மிஷ்கின் கலந்து கொண்டனர். மதுரை பட்டறையில் பங்கேற்று தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்துகொள்ள இருப்பவர் சுப்ரமணியபுரம் இயக்குனர் சசிகுமார்.

இவருடன் சுப்ரமணியபுரத்தின் கேமராமேன் கதிரும் பட்டறையில் பங்கேற்று கேமரா குறித்து அதன் தொழில்நுட்பங்களை விளக்குகிறார்.

இந்த அரிய வாய்ப்பை நிழல் இதழும் தமிழ்நாடு குறும்பட - ஆவணப்பட படைப்பாளிகள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. அனைவரும் இதில் பங்குபெறலாம். எளிய கட்டணத்தில் தங்கும் வசதி, உணவு ஏற்பாடு செய்து தரப்படும்.

மேலும் விவரங்களுக்கு நிழல் ஆசிரியர் திருநாவுக்கரசை 94444 84868 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ் படத்தில் மீண்டும் நாயகி ஆகும் சாய் பல்லவி.. பரபரப்பு தகவல்..!

AK64 படத்தை தயாரிக்கப்போவது இவரா?!.. ஆனா ஒரு கண்டிஷன்!...

சூர்யா 46 தலைப்பு வேற லெவல்!.. கண்டிப்பா ஹிட்டுதான்!..

STR51 அப்டேட் எப்போது? சிம்புவின் பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி தருவாரா அஷ்வத் மாரிமுத்து?

ஒரு ஆண், ஒரு பெண்.. இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான ராம் சரண் தேஜா.. சிரஞ்சீவி மகிழ்ச்சி..!

Show comments