அறிமுக இயக்குனர் படத்தில் விஷால்!

Webdunia
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (20:08 IST)
மூன்று கோடி பட்ஜெட்டில் தொடங்கிய படம். ப்ரேம் பை ப்ரேம் இழைத்ததில் இருபத்து மூன்று கோடியை தொட்டு நிற்கிறது. தயாரிப்பாளராக சின்ன வருத்தமாவது வேண்டுமே. சத்யம் தயாரிப்பாளர் விக்ரம் கிருஷ்ணா எக்ஸ்ட்ரா தெம்புடன் இருக்கிறார்.

படத்தின் ஹீரோ விஷாலிடம் தான் சுணக்கம். த்ரிஷாவுடன் காதல் என்று யாரோ பத்த வைத்த நெருப்பில் நட்பு வட்டாரத்தில் ஏக புகைச்சலாம். சத்யம் வெளியான பிறகு சிறிது நாள் ஓய்வெடுக்கும் முடிவில் இருப்பவர், அடுத்ததாக இரண்டு படங்களில் நடிக்கிறார்.

சூப்பர் ஹீரோவாக அவரே இயக்கி நடிக்கும் படம் ஒன்று. விஷாலின் நண்பர் பிருத்வி இயக்கும் படம் இன்னொன்று. இதில் விஷாலுக்கு இரண்டு வேடங்கள். இவர் இரண்டு வேடங்களில் தோன்றும் முதல் படம் இது.

இரண்டில் எந்தப் படம் முதலில் தொடங்கும் என்பது விஷாலின் பூவா தலையா முடிவுக்கு விடப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிரித்து சிரித்து கண்ணீர் வரும் வரை ஆடிய மிகச்சிறந்த இரவு.. திருமணத்திற்கு பின் ராஷ்மிகாவின் பதிவு..!

ரூ.300 கோடி வசூல் செய்த ‘கேரளா ஸ்டோரி’ முதல் பாகம்.. ஆனால் இரண்டாம் பாகம்?

வசூலை அள்ளும் தாய் கிழவி!.. 3 நாள் வசூல் அப்டேட்!..

கார் விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை தேவி பிரியா!... ஓட்டுனர் மரணம்!...

நிம்மதியாக உறங்க முடியவில்லை.. துபாயில் சிக்கி கொண்ட பிரபல நடிகையின் இன்ஸ்டா பதிவு..!

Show comments