Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குசேலன் - பாலசந்தர் விமர்சனம்!

Webdunia
வியாழன், 31 ஜூலை 2008 (16:50 IST)
குசேலன் எப்படி வந்திருக்கிறது? படத்தை ரசித்து முதல் விமர்சனத்தை முன்வைத்துள்ளார் பாலசந்தர்.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகும் குசேலனின் பிரிமியர் ஷோ, சென்னை போர் பிரேம் திரையரங்கில் நடந்தது. ரஜினி தனது மனைவி லதா, மகள் செளந்தர்யாவுடன் கலந்து கொண்டார்.
webdunia photoWD

படத்தின் தயாரிப்பாளர் பாலசந்தர், இயக்குனர் பி. வாசு, படத்தை வாங்கிய பிரமிட் சாய்மீராவின் நிர்வாக இயக்குனர் சாமிநாதன், போர் பிரேம் திரையரங்கின் உரிமையாளரும், இயக்குனருமான பிரியதர்ஷனின் மனைவி லிசி ஆகியோரும் ரஜினியுடன் படம் பார்த்தனர்.

படத்தை பார்த்த பாலசந்தர் இது வழக்கமான ரஜினி படம் இல்லை என்றார் நெகிழ்ச்சியுடன். சூப்பர் ஸ்டாராக இருப்பவருக்கும், அவரது ஏழை நண்பருக்கும் உள்ள மனிதாபிமானமே குசேலன் என்றவர், வழக்கம் போல் சண்டையில் முடியவில்லை, ஆனால் படம் பார்த்து வருகிறவர்கள் கண்கலங்கியபடிதான் வருவார்கள் என்றார்.

படத்தின் இறுதி 20 நிமிடங்கள் சிறப்பாக இருப்பதாகவும், கிளைமாக்ஸில் ரஜினி தன்னை கண்கலங்க வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பாலசந்தரின் விமர்சனம் குசேலன் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments