Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கில் மோனிகா!

Webdunia
வியாழன், 31 ஜூலை 2008 (16:49 IST)
ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்க மண்டைய உடைத்துக் கொண்டிருக்கிறார்கள் கோலிவுட்டில். இதற்கு இவர்கள் கையாளும் எளிய தந்திரம், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் படத்தை எடுப்பது.

பிரபு சாலமனின் லாடம் படத்தில் சார்மி ஹீரோயின். சார்மி அறிமுகமானது தமிழில் என்றாலும், இன்று முதல் வரிசை நாயகியாக அவர் இருப்பது தெலுங்கில். தமிழில் யாருக்கும் சார்மியின் முகம் நினைவில் இல்லை. பிறகு ஏன் சார்மி?

லாடம் தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் தயாராகிறது. தெலுங்கில் சார்மிக்கு நல்ல மார்க்கெட். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

ஜகன் மோகினி ரீ-மேக்கில் இயக்குனர் விஸ்வநாதன் நமிதா, நிலா என இரு கிளாமர் நடிகைகள் ஒப்பந்தம் செய்தது சரி. அவர்களுக்கு ஜோடியாக ஒரேயொரு தமிழ்ப் படத்தில் நடித்த ராஜாவை ஏன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்?

ஆச்சரியப்பட்டவர்களுக்கு விடை கிடைத்திருக்கிறது. ராஜா தமிழில்தான் யாரோ. தெலுங்கில் முன்னணி ஹீரோ. ஜகன் மோகினியை தெலுங்கிலும் எடுப்பதால் சந்தை மதிப்புக்காக ராஜாவை ஹீரோவாக்கியிருக்கிறார்கள்.

விட்டால் அம்பானி சகோதரர்களுக்கே நம்மவர்கள் பிஸினஸ் சொல்லிக் கொடுப்பார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments