இந்தியில் லட்சுமிராய்!

Webdunia
புதன், 30 ஜூலை 2008 (19:44 IST)
தென்னிந்திய மொழியில் நடிக்கும் ஏறக்குறைய எல்லா நடிகைகளின் எதிர்கால கனவு பாலிவுட்டாகவே இருக்கிறது. லட்சுமிராயும் விதிவிலக்கல்ல.

இந்திப் படத்தில் நடிப்பது என் நெடுநாளைய கனவு என்று உற்சாகத்தில் ஏறக்குறைய கூவுகிறார். காரணம்? சிம்பிள், கனவு நிறைவேறியிருக்கிறது!

அசின், ஜெனிலியா, ஸ்ரேயாவை தொடர்ந்து இதோ லட்சுமி ராயும் பாலிவுட்டில். சதீஷ் கெளசிக் இயக்கும் Hey Gujju படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ராய். இவருக்கு ஜோடி ஹிமேஷ் ரேஷ்மியா! தசாவதாரம், பொம்மலாட்டம் படங்களுக்கு இசையமைத்தார... அவரேதான்!

இசையமைப்பாளராக சினிமாவில் நுழைந்த ஹிமேஷ் இன்று பாலிவுட்டின் முன்னணி ஹீரோ. இவருடன் ஜோடி சேர முன்னணி நடிகைகள் முட்டிமோதும் போது, எந்த பின்னணியும் இல்லாமல், சாதித்திருக்கிறார் ராய்.

சந்தோஷத்துக்கு கேட்கவா வேண்டும்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments