குசேலன் - ரசிகர் சலுகை குறைப்பு!

Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2008 (19:55 IST)
ரஜினி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதும் ராகவேந்திரா திருமண மண்டபம் களை கட்டும். மன்ற லெட்டர் பேடுடன் க்யூவில் நின்று முதல் வாரத்துக்கான டிக்கெட்டுகளை பணம் கட்டி வாங்கிச் செல்வார்கள் ரசிகர்கள். அடிதடியில்லாமல் ரசிகர்கள் தலைவர் படம் பார்க்க இந்த ஏற்பாடு.

சில பிஸினஸ் புள்ளிகள் போலி லெட்டர் பேடுடன் டிக்கெட்டுகள் வாங்கி வெளியே அதிக விலைக்கு விற்கத் தொடங்கியதால் லெட்டர்பேடு முறையை கைவிட தலைமை மன்றம் முடிவெடுத்தது. ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று, லெட்டர்பேடு முறையை நீட்டிக்க தற்போது தலைமை மன்றம் முன்வந்துள்ளது.

அதேநேரம், குசேலன் படத்துக்கு வழக்கமாக ரசிகர்களுக்கு வழங்கும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மட்டும் முதல் வாரத்தில் படம் பார்த்தால் போதுமா நாங்கள் பார்க்க வேண்டாமா என பொது ஜனங்களிடமிருந்து நிறைய புகார்கள்.

இது ரஜினி காதூக்கு எட்ட, அவரின் ஆணைப்படி, டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை தலைமை மன்றம் பாதியாக குறைத்துள்ளது.

ரசிகர்களுக்கு இதில் வருத்தம்தான்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெய்பீம் இயக்குனருடன் மீண்டும் இணையும் சூர்யா!.. பரபர அப்டேட்!..

மாசம் 1.5 கோடி வட்டி.. வாழ்க்கை செட்டில்! நயன்தாரா கணவர் போடும் 350 கோடி மாஸ்டர் பிளான்

1 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய தமன்னாவின் மனு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

என்னை சூனியக்காரி என்று அழைத்தனர்: முன்னாள் காதலர் மீது கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு..!

ஜனநாயகன் லீக்!. ஸ்டுடியோவில் நுழைந்த வீடியோ எடிட்டர்!.. முக்கிய குற்றவாளி கைது!..