ஆகஸ்டில் தாம்தூம்!

Webdunia
திங்கள், 21 ஜூலை 2008 (20:37 IST)
குசேலன் இம்மாதம் வெளியாவதால், அடுத்த மாதம் சுதந்திர தினத்தன்று வெளியாகிறது ஜீவாவின் தாம்தூம்!

இயக்குனர் ஜீவாவின் கடைசிப் படமான இதன் பெரும்பாலான காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்டன. மருத்துவப் படிப்பு முடிந்து ஊர் திரும்பும் ஜெயம் ரவி, மெடிக்கல் கான்ஃபிரன்சுக்காக மீண்டும் ரஷ்யா செல்ல நேர்கிறது.

அப்போது ஏற்படும் எதிர்பாராத சம்பவம் ஜெயம் ரவியின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. பெரும் போராட்டத்திற்குப் பிறகு அதனை ஜெயம் ரவி எப்படி நிமிர்த்திப் போடுகிறார் என்பது கதை.

நான்கு படங்களை இயக்கிய ஜீவாவின் முதல் மற்றும் முடிவான ஆக்சன் படம் இது. கங்கனா ரனவத், லட்சுமிராய் நடித்துள்ளனர்.

ரஷ்ய காட்சிகளில் வரும் லட்சுமிராய் ஜெயம் ரவிக்கு உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுக்கும் காட்சி ஒன்று இடம்பெறுகிறது. இது காதல் காட்சியில் வருவதல்ல, கதையோட்டத்தில் வரும் முத்தக்காட்சி என்றார் மணிகண்டன்.

ஜீவாவின் உதவியாளரான இவர்தான், ஜீவாவின் மறைவிக்குப் பிறகு விட்டுப்போன காட்சிகளை எடுத்து, படத்தை நிறைவு செய்தவர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'டிமான்டி காலனி - 3' படத்தின் முதல் பார்வை போஸ்டர் எப்போது? படக்குழு அறிவிப்பு..!

திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் உச்சகட்ட கவர்ச்சி.. ‘டாக்சிக்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

‘பருத்திவீரன்’ படத்தில் நடித்து பாட்டு பாடிய நாட்டுப்புற பாடகி காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

குலதெய்வ கோயிலில் மகளுடன் சாமி வழிபாடு செய்த அஜீத்.. வைரலாகும் புகைப்படம்..!

Show comments