சரவணின் கருப்பன்!

Webdunia
சனி, 19 ஜூலை 2008 (21:00 IST)
நாலு பேருக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பில்லை! நாயகன் வேலு நாயக்கரின் இந்த வார்த்தைப்படி வாழ்ந்த பெரிய மனிதர் ஒருவரின் நிஜக்கதை திரைப்படமாகிறது.

வி. ஹரி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படம் விருதுநகர் பின்னணியில் தயாராகிறது. படத்தின் பெயர் கருப்பன். டைட்டில் ரோலில் சரவணன் நடிக்கிறார்.

படத்தில் சரவணனுக்கு ஐம்பது வயது என்பதால் இளசாக இரண்டு பேரை பிடித்துப் போட்டிருக்கிறார் கருப்பன் இயக்குனர். ஆதி சுந்தர், ஷெரின் ஹாசினி என்ற அந்த இருவருமே புதுமுகங்கள்.

இயக்குனர் வி. ஹரியை தெரியாதவர்களுக்கு அவரது பாட்டியை நன்றாகத் தெரிந்திருக்கும். பழம்பெரும் குணச்சித்திர நடிகை எஸ்.என். லட்சுமியின் பேரன் இந்த ஹரி.

கருப்பனுக்கு ஆதித்யன் இசையமைக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments