ராஜ் தொலைக்காட்சியின் காதல்னா சும்மா இல்லை!

Webdunia
வெள்ளி, 18 ஜூலை 2008 (19:50 IST)
தொலைக்காட்சி சானல்கள் படத் தயாரிப்பில் ஆர்வட் காட்டுகின்றன. கலைஞர், ஸீ போன்ற சானல்கள் பெரிய படங்களின் உரிமைகளை உடனே வாங்கி விடுவதால் பிற சானல்களுக்கு படப் பற்றாக்குறை.

சன் டி.வி. ராடானுடன் கைகோர்த்து படம் தயாரிக்கிறது. ராஜ் டெலிவிஷன் நெட்வொர்க் தன் பங்கிற்கு தயாரிக்கும் படம், காதல்னா சும்மா இல்லை.

இளங்கண்ணன் தயாரிக்கும் இந்தப் படத்தை ஏ.எம். ரத்னத்தின் ஸ்ரீசூர்யா மூவிஸ் தயாரிப்பதாக இருந்தது. தற்போது ராஜ் தொலைக்காட்சி அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளது.

காம்யம் தெலுங்குப் படத்தின் ரீ-மேக்கான இதில் கமாலினி முகர்ஜி, ரவி கிருஷ்ணா, தெலுங்கு நடிகர் சரவணானந்த் நடிக்கின்றனர்.

பூஜை, போஸ்டர் என்று ஆடம்பரத்துக்குள் நுழையாமல் படப் பிடிப்பை தொடங்கியிருக்கிறார் இளங்கண்ணன்.

சமீபத்தில் தேஜாஸ்ரீயின் நடனம் ஒன்று பிரசாத் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

Show comments