தலைமுறை - படமாகும் நாவல்!

Webdunia
புதன், 16 ஜூலை 2008 (19:49 IST)
சந்தனக்காடு தொலைக்காட்சி தொடர் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் வ. கெளதமன், தொலைக்காட்சிக்கு தற்காலிக விடுப்பு விடுகிறார்.

கெளதமனின் விருப்ப இடம், சினிமா. முதல் படம் கனவே கலையாதே சரியாகப் போகாததால், அவரின் கேரியர் ட்ரெயின் தொலைக்காட்சி ட்ராக்கிற்கு தடம் மாறியது. சந்தனக்காடு கொடுத்த வெளிச்சத்தில் மீண்டும் தனது விருப்ப ஏரியாவுக்கு திரும்புகிறார் கெளதமன்.

கெளதமனின் எழுத்தாளர் நீல. பத்மநாபனின் தலைமுறை நாவலை பல ஆண்டுகளுக்கு முனூபே, திரைப்படத்துக்கேற்ற வகையில் திரைக்கதையாக்கியிருந்தார். தலைமுறையை சினிமாவாக எடுக்க நீல. பத்மநாபனிடம் அனுமதியும் பெற்றிருந்தார். இப்போது தயாரிப்பாளரும் கிடைக்க, தலைமுறையை ஃபிலிமுக்கு கொண்டுவரும் வேலையில் முழு வீச்சில் இறங்கியுள்ளார்.

இதுதவிர, கனவே கலையாதே தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனுக்காகவும் ஒரு படம் இயக்குகிறார் கெளதமன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments