நீக்ரோ மாதவன்!

Webdunia
புதன், 16 ஜூலை 2008 (19:48 IST)
கமலின் மேக்கப் ஜுரம் அவரின் ரசிகரான மாதவனையும் தாக்கியுள்ளது.

குரங்கை கிளியாக்குவது அல்ல, கிளியை குரங்காக்குவதே மேக்கப் என குணாவில் புரிய வைத்தவர் கமல். அந்த பாலபாடத்தை பரீட்சத்துப் பார்த்துள்ளார் மாதவன்.

ஏவி.எம். ஸ்டுடியோவல் எடுக்கப்பட்ட 'குரு என் ஆளு' படத்தின் பாடல் காட்சியில் நீக்ரோ இளைஞன் ஒருவர் நடுநாயகமாக ஆடிக் கொண்டிருந்தார். அடர் கருப்பு, சுருள் முடி, தடித்த உதடு, அச்சு அசலாக ஜமைக்கா கறுப்பர் போலிருந்த அவர், மாதவன்!

அவரே ஸ்பெஷல் விக் எடுத்து வந்து இந்த மிரட்டல் மேக்கப்பை போட்டுள்ளார். இந்த மேக்கப்பிற்கு இன்ஸ்பிரேஷன் கமல்தானாம். செல்வா இயக்கும் இப்படத்தில், ஒரேயொரு பாடல் காட்சியில் மட்டும் இப்படி நீக்ரோ இளைஞனாக தோன்றுகிறார் மாதவன். (நல்லவேளை)

படத்தில் மாதவனுடன் அப்பாஸ், மம்தா மோகன்தாஸ், பிருந்தா பரேக் நடிக்கின்றனர். இந்தி 'எஸ் பாஸ்' படத்தின் தழுவலே குரு என் ஆளு. (எஸ் பாஸ் கொரிய படமொன்றில் தழுவல் என்பது இன்னொரு சுவாரஸ்யம்).
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லோகேஷ் இயக்கும் அடுத்த படம் இதுதான்!. வீடியோவே வேறலெவல்!...

ஒன் மேன் ஷோ! ‘வா வாத்தியாரே’ படம் எப்படி இருக்கு? வெளியான ட்விட்டர் விமர்சனம்

பராசக்தியை பாராட்டிய ரஜினி ஜனநாயகன் பத்தி பேசினாரா?!.. பொங்கும் விஜய் ரசிகர்கள்..

அத பத்தி நான் பேச விரும்பல!.. பிரதமர் பொங்கல் விழாவில் எஸ்கேப் ஆன SK!...

‘ஜனநாயகன்; மட்டுமல்ல, விஜய்யின் இன்னொரு படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைப்பு.. தாணு அறிவிப்பு..!

Show comments