பாவனாவைக் கொண்டாடும் 'அம்மா'

Webdunia
வெள்ளி, 11 ஜூலை 2008 (20:10 IST)
மலையாள நடிகர்கள் சங்க அமைப்பின் பெயர் 'அம்மா'. சங்கத்தின் நல நிதிக்காக 'டுவெண்டி டுவெண்டி' என்ற படத்தை தயாரிக்கிறது அம்மா அமைப்பு. மலையாள முன்னணி நட்சத்திரங்கள் பலரும் டுவெண்டி டுவெண்யில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் மீராஜாஸ்மினோ நோ சொல்லிவிட்டார். நடிகர் சங்கமும் மிரட்டி, உருட்டி பார்த்தது. மிரளுமா கஸ்தூரிமான். மீராவிடம் கதை ஆகாது என்பதை உணர்ந்துகொண்ட அம்மா, அந்த வேடத்தில் நடிக்க பாவனாவிடம் சம்மதம் கேட்டுள்ளது.

இப்போது மீரா வேடத்தில் பாவனா நடிக்கிறார். ஜெயம் கொண்டான் முடித்து ஹைதராபாத்தில் வேறொரு படப்பிடிப்பில் இருந்த பாவனா டுவெண்டி டுவெண்டி சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைக்காக கேரளா சென்று திரும்பியுள்ளார். இப்போது 'அம்மா'வின் செல்ல மகளாகிவிட்டார் பாவனா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அவன பற்றிய ஒரு ஆதாரம் என்கிட்ட இருக்கு.. நல்லவன் கிடையாது.. திவாகர் பற்றி பிரஜின் ஆவேசம்

சோலோவாக ரிலீஸாகும் ‘பராசக்தி’.. இன்றைய காலத்தில் இந்தி எதிர்ப்பு படம் எடுபடுமா?

ரஜினிகாந்த் - சிபி சக்கரவர்த்தி படத்தின் நாயகி தீபிகா படுகோன்? பரபரப்பு தகவல்..!

சிம்புவின் ‘அரசன் பட ஹீரோயின் யார்? சமந்தா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை?

ஜனநாயகன் பட சிக்கல்!.. விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ்...

Show comments