குணசேகர் இயக்கத்தில் விஷால்!

Webdunia
வெள்ளி, 11 ஜூலை 2008 (14:31 IST)
' ஒக்கடு' படத்தின் மூலம் தெலுங்கில் பேசப்ப‌ட்டவர் இயக்குநர் குணசேகர். குணசேகரின் அடுத்த படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்.

இதனால் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் விஷால் அடுத்த படம் நடிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் காலதாமதமாக வாய்ப்பிருக்கிறது. சத்யம் படப்பிடிப்பு முடிந்த பின்பு தனய்யா தயாரிப்பில் விஷால் தெலுங்கில் பிரவேசம் செய்வது உறுதியாகிவிட்டது.

தான் இதுவரை நடித்த அனைத்து படங்களுமே தெலுங்கில் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பு பெற்றதும், தெலுங்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுமே விஷாலின் இந்த முடிவுக்கு காரணம் என்கிறார்கள்.

விஷாலின் உடலமைப்பு, முகபாவம், பாவனைகள், ஆக்சன் இவை தமிழை விட தெலுங்கில் நன்றாக அமைந்தால் இனி தெலுங்கிலிருந்து அவர் படத்தை தமிழில் டப் செய்ய வேண்டிய நிலை வந்தாலும் வரலாம். யார் கண்டது?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

எனக்கு கிடைக்கிறது ரஞ்சித்துக்கும் கிடைக்குமா?!.. மோகன்.ஜி சர்ச்சை பேச்சு..

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!

நான் டீக்கடையில் வேலை செஞ்சேன்!. ஜனநாயகன் இயக்குனர் ஓப்பன்!...

சொன்ன கதை வேற.. எடுத்தது வேற!.. சிக்கந்தர் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா தகவல்...

Show comments