'பொன்னர்-சங்கர்' திரைப்படமாகிறது!

Webdunia
புதன், 9 ஜூலை 2008 (19:59 IST)
' பொன்னர்-சங்கர்' கலைஞர் கருணாநிதியால் எழுதி வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற சரத்திர நாவல். பிரபல வார இதழில் தொடராகவும், பின்னர் புத்தகமாகவும் வெளிவந்த இந்த சரித்திர நாவல் திரைப்படமாகிறது.

ஈரோடு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து, சரித்திர காலத்தில் வீரமும், தீரமும் மிக்கவர்களாகத் திகழ்ந்த பொன்னர்-சங்கர் பற்றிய இந்நாவலை திரைப்படமாக்கும் முயற்சி முழு வீச்சில் நடந்து வருகிறது.

படத்தை தயாரித்து இயக்கும் பணியில் நடிகர் தியாகராஜன் ஈடுபட்டுள்ளார். பொன்னராகவும், சங்கராகவும் இரு வேடமேற்று நடிக்கிறார் நடிகர் பிரசாந்த்.

இதுவரை வந்துள்ள சரித்திர படங்களைவிட அதிக பொருட்செலவில் வெளிவரப் போகும் பொன்னர்-சங்கர் சரித்திரப்பட வரலாற்றில் சாதனையாகப் பேசப்படும் என்கின்றனர். மம்பட்டியானின் சாமர்த்தியம் படம் வந்தால் வெளிச்சமாகும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடுமையான கோடை வெப்பத்தை தணிக்க மருத்துவரின் 6 முக்கியமான ஆலோசனைகள்!

10 ஆண்டு திட்டமிட்டு வடகொரியாவில் இருந்து தப்பித்த குடும்பம்.. தென்கொரியாவில் தஞ்சம்..!

H-1B விசாக்களுக்கு 3 ஆண்டுகள் தடை? அமெரிக்காவில் அறிமுகமான புதிய மசோதாவால் இந்தியர்களுக்கு பாதிப்பு?

CUET PG 2026 முடிவுகள் வெளியீடு: மதிப்பெண் பட்டியலை டவுன்லோடு செய்வது எப்படி?

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

Show comments