ந‌‌லி‌ந்த கலைஞ‌ர்களு‌க்கு கருணா‌நி‌தி ரூ.25 லட்சம் ‌நி‌‌தியுத‌வி!

Webdunia
புதன், 9 ஜூலை 2008 (15:51 IST)
' உ‌ளி‌யி‌ன ் ஓச ை' ‌ திரை‌‌ப்பட‌த்து‌க்க ு கத ை, வசன‌ம ் எழு‌த ி அத‌ன ் மூல‌ம ் ‌ கிடை‌த் த ர ூ.25 ல‌ட்ச‌த்த ை ந‌லி‌ந் த கலைஞ‌ர்களு‌க்க ு முத‌லமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி வழ‌ங்‌கியு‌ள்ளா‌ர ்.

முதலமை‌ச்‌ச‌ர ் கருணா‌நி‌த ி இ‌ன்ற ு வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ், நான் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதி அண்மையில் வெளியிடப்பட்டுள்ள திரைப் படம் "உளியின் ஓசை''க்காக அந்தப்படத்தின் தயாரிப்பாளர்கள் எனக்கு ர ூ.25 ல‌ட்ச‌ம ் அ‌ளி‌த்தன‌ர ்.

அந்தத் தொகைக்கு நான் கட்ட வேண்டிய வருமான வரி போக எஞ்சிய தொகையை- தமிழ் படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர், இயக்குநர் ராமநாராயணன் மூலமாக திரைப்படத் துறையைச் சேர்ந்த நலிந்த தொழில் நுட்பக்கலைஞர்களுக்கு தல ா ர ூ.10,000 வீதம் வழங்குவதற்காக இன்றைய தினம் அளிக்கின்றேன்.

2004-2005 ஆம் ஆண்டுகளில் இதுபோலவே நான் எழுதிய "கண்ணம்மா'' திரைப்படத்திற்கான 10 லட்சம் ரூபாயையும், "மண்ணின் மைந்தன்'' திரைப் படத்திற்கான 11 லட்சம் ரூபாயையும் ஆக மொத்தம் 21 லட்சம் ரூபாயை "சுனாமி'' நிவாரண நிதிக்காக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் என் மகன் மு.க.ஸ்டாலின் மூலமாக வழங ்‌ கினா‌ர ்.

அதேபோலவே இப்போது இந்த "உளியின் ஓசை'' திரைப்படத்திற்கு கிடைத்த தொகையையும், திரைப்படத்துறையைச் சேர்ந்த நலிந்த தொழில் நுட்பக் கலைஞர்களுக்காவே அளித்துள்ளேன் எ‌ன்ற ு கருணா‌நி‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments