மேஜர் அவதாரமெடுக்கும் மோகன்லால்!

Webdunia
செவ்வாய், 8 ஜூலை 2008 (19:53 IST)
' குருசேத்ரா' என்ற தலைப்பைப் பார்த்ததும் பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் யுத்தம் நடந்த பூமியை மனதில் வைத்துக்கொண்டு இது புராணப் படம் என்று நினைத்தால் ஏமாந்துதான் போகவேண்டும்.

இது கார்கில் போரின்போது நமது எல்லையில் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றிய படம். மோகன்லால் மேஜர் மகாதேவன் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தனது 'அரண்' படத்தை அடுத்து இதிலும் லால் ஹீரோவாக நடிப்பது, இயக்குனர்-நடிகர் கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆனதுதான் காரணம் என்கிறார்.

குருசேத்ரா மலையாளத்தில் தயாராகி வந்தாலும் உடனடியாக தமிழில் மொழிமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. கிராமத்து இயக்குனர், காதல் இயக்குனர், பீரியட் ஃபிலிம் இயக்குனர் என்பதுபோல் இயக்குனர் மேஜர் ரவி பட்டாளத்து இயக்குனர் என்ற பட்டம் பெற்றாலும் அச்சரியப்படுவதற்கில்லை.

எல்லைப் பகுதிகளில் நமது வீரர்களின் நிலைமை என்ன என்பதைச் சொல்லப் போகும் குருசேத்ரா டீம் விரைவில் கார்கில் போர் ஏரியாக்களில் களம் இறங்கப் போகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்த படம்.. ஹீரோ இவர் தான்.. இசை அனிருத்தும் இல்லை.. ஏஆர் ரஹ்மானும் இல்லை..!

ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

Show comments