உளியின் ஓசை - ஃபுல் ஹவுஸ்!

Webdunia
சனி, 5 ஜூலை 2008 (20:41 IST)
வினித், கீர்த்தி சாவ்லா, அட்சயா. பிரபலமில்லாத நட்சத்திரங்கள். அறிமுகமில்லாத இயக்குனர். சரிதான் தியேட்டர் ஈயாடும் எனப்போனால் எ‌ள் போட இடமில்லை. முதல்வரின் கதை வசனத்தில் உருவான உளியின் ஓசைக்குதான் இத்தனை கூட்டமும்.

தனது கதை வசனத்தில் உருவான எந்தப் படத்திற்கும் இவ்வளவு கரிசனம் காட்டியதில்லை முதல்வர். படத்துக்கு ஆதரவுதர உடன்பிறப்புகளுக்கு ரகசிய சமிக்ஞை அனுப்பப்பட்டதாக பேச்சு. பிறகு எப்படி திரையரங்கு நிரம்பி வழியும் என்கிறார்கள் நமட்டு சிரிப்புடன்.

படம் குறித்து இன்னொரு சுவாரஸ்யமான சேதி, அமைச்சர் எ.வ. வேலு படத்தின் மொத்த ரைட்ஸை வாங்கியிருப்பது. ரலீசுக்கு முன்பே லாபத்தோடு தள்ளிவிட்டதால் ரிலாக்சாக காலாட்டிக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஆறுமுகனேரி முருகேசன்.

முதல்வரின் கருணை எல்லாப் படத்திற்கும் இருந்தால் தயாரிப்பாளர்கள் ஏன் தற்கொலை செய்யப் போகிறார்கள்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துபாயில் வீடு வாங்கும் சிம்பு!.. விலை என்ன தெரியுமா?!...

ரஜினி - கமல் படம் டேக் ஆப் ஆகாமல் போனது ஏன்?.. ஓப்பனாக பேசிய லோகேஷ்!..

பழுதடைந்த சார்ஜர் கொண்ட மொபைல் ஃபோன்.. மாதவிடாய் நின்ற காலத்தினை ஒப்பிட்ட பிரபல நடிகை..

வடநாட்டு அரசியலில் ஒரு திருப்பம் ஏற்படும் என ரஜினி என்னிடம் சொன்னார்: வைரமுத்து

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

Show comments