மாளவிகா மீது வழக்கு - இறங்கி வந்த இயக்குனர்!

Webdunia
வியாழன், 3 ஜூலை 2008 (20:49 IST)
கர்ப்பம் என்று சொல்லி கம்பி நீட்டிய மாளவிகா மீது மான நஷ்ட வழக்கு போடுவோம், நஷ்டஈடு 75 லட்சம் கேட்போம் என்றெல்லாம் வீர வசனம் பேசிய கார்த்தீகை படத்தின் இயக்குனர் வீரா, தனது வசனத்தின் வாலை சுருட்டிக் கொண்டுள்ளார்.

இறுதியாக கிடைத்த தகவலின்படி, மாளவிகா மீது வழக்கெல்லாம் போடப் போவதில்லையாம். மாளவிகாவுக்கு பதில் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்தாலும், மாளவிகா நடித்த பாடல் காட்சி படத்தில் அப்படியே இருக்குமாம். அட, இதுக்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டம் என்றால்,

மாளவிகா படத்தில் நடிக்க முடியாதுன்னு சொல்லலை. குழந்தை பிறந்தப்புறம் நடிக்கிறேன்னுதான் சொன்னாங்க என்று அப்படியே பிளேட்டை திருப்பிப் போடுகிறார்.

சினிமாக்காரர்களின் வீரமும் வசனமும் திரையோடு சரி. தரைக்கு வந்தால் இங்கு வீராவும் வெறும் சோதாதான்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் டீக்கடையில் வேலை செஞ்சேன்!. ஜனநாயகன் இயக்குனர் ஓப்பன்!...

சொன்ன கதை வேற.. எடுத்தது வேற!.. சிக்கந்தர் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா தகவல்...

கவுண்டமணியுடனான காம்போ! 19 டேக் எடுத்த ரஜினி.. என்ன படம் தெரியுமா?

மூன்று குரங்குகள் கதை தெரியுமா? நயன்தாராவுடன் நட்பான பகையாளிகள்

புது டிரெண்டை உருவாக்கிய ஜீவா! இனிமே பாருங்க.. இளவரசு சொன்ன புது தகவல்

Show comments