Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி படம் - நடிக்க மறுத்த முன்னணி நடிகர்கள்!

Webdunia
வியாழன், 26 ஜூன் 2008 (19:48 IST)
webdunia photoWD
ரஜினி படத்தில் நடிக்க நான் நீ என்று போட்டியிடுவார்கள். இது ஒருபுறமிருக்க, ரஜினி படத்தில் நடிக்க விருப்பமில்லையென ஒட்டுமொத்த முன்னணி நடிகர்களும் அதிருப்தி தெவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்த பி. வாசு, குசேலனில் 75 வருட சினிமா பவள விழாவை குறிக்கும் பாடலில் அஜித், விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களை நடிக்க வைக்க இருப்பதாகக் கூறினார்.

இதனை பத்திரிக்கை மூலமாக அறிந்து கொண்டவர்கள் பி. வாசுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எங்களிடம் கேட்காமல் எப்படி நீங்களே தன்னிஷ்டப்படி இப்படியொரு அறிவிப்பை வெளியிடலாம் என தங்களின் அதிருப்தியை பேச்சில் காட்டியிருக்கிறார்கள்.

மேடையிலும், பேட்டிகளிலும் ரஜினியை புகழ்ந்து தள்ளும் முனூனணி ஹீரோக்களின் இந்த அதிருப்தி முணுமுணுப்பை பி. வாசு எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்துபோன அவர், எல்லோரையும் நடிக்க வைப்பதாக ஆலோசனை ஒண்ணு இருக்கு என்றுதான் சொன்னேனே தவிர, கண்டிப்பா நடிக்கிறதா சொல்லலை என்று விளக்கமளித்துள்ளார். ஆனாலும், சம்பந்தப்பட்டவர்கள் சமாதானமடைந்ததாகத் தெரியவில்லை. இந்த விஷயம் ரஜினிக்கும் தெரிந்து அவர் அப்செட் ஆனதாகக் கேள்வி.

இதையடுத்து இன்று காலை சாந்தி திரையரங்கில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் பி. வாசு. குறிப்பிட்ட பாடல் காட்சியில் அஜித், விஜய், விக்ரம், சூர்யா உள்பட எந்த நடிகரும் நடிக்கவில்லை என்றார்.

தன்னிடம் தொலைபேசியில் எந்தெந்த நடிகர்கள் தொடர்பு கொண்டு பேசினார்கள் என்பதை வாசு தெரிவிக்கவில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments