மாளவிகா நீக்கம்!

Webdunia
வியாழன், 26 ஜூன் 2008 (19:40 IST)
கார்த்தீகை படத்திலிருந்து மாளவிகாவை நீக்கியிருக்கிறார் இயக்குனர் வீரா.

கார்த்தீகை தயாரிப்பாளர் ஆஞ்சநேயலு செக்ஸ் டார்ச்சர் செய்கிறார் என மும்பை சென்றுவிட்ட மாளவிகா, எந்த சமரசத்துக்கும் இறங்கி வருவதாகத் தெரியவில்லை. குழந்தை பிறந்த பிறகே கார்த்தீகையில் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். வழக்கு போடுவோம், நஷ்டஈடு கேட்போம் என்ற தயாரிப்பாளர் தரப்பு பூச்சாண்டிக்கும் அசைந்து கொடுக்கவில்லை மாளவிகா.

கெஞ்சிப் பார்த்தாயிற்று. மிஞ்சியும் பார்த்தாயிற்று. அதற்குப் பிறகும் வேதாளம் முருங்கை மரம்விட்டு இறங்கவில்லையென்றால்...?

மாளவிகாவை கார்த்தீகை படத்தைவிட்டே தூக்கியிருக்கிறார்கள். அவருக்கு பதில் வேறு முன்னணி நடிகை கார்த்தீகையில் நடிக்கிறார்.

மாளவிகாவால் ஏற்பட்ட பொருள் இழப்பு, மன உளைச்சல் ஆகியவற்றிற்காக ரூபாய் 75 லட்சம் கேட்டு வழக்கு போடவும் முடிவு செய்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..