அப்பா மகனாக விஜயகாந்த்!

Webdunia
செவ்வாய், 24 ஜூன் 2008 (19:46 IST)
அப்பா வேடம் விஜயகாந்துக்கு அல்வா மாதிரி. வெள்ளை தலைமுடி, கதர் சட்டை-வேட்டி, உடம்பு அலங்காத நடை, கூப்பிட்ட குரலுக்கு கழுத்து சுளுக்கியவர் போல் மெதுவாக தலைதிருப்பிப் பார்த்தால்... அப்பா விஜயகாந்த் தயார்!

விக்ரமனின் வானத்தைப் போல படத்தில் விஜயகாந்துக்கு அண்ணன், தம்பி என்று இரண்டு வேடம். கதைப்படி அண்ணன் என்றாலும் மேனரிஸம் எல்லாம் நாம் மேலே சொன்ன அப்பா மாதிரிதான்.

அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் விக்ரமன் இயக்கும் படத்திலும் விஜயகாந்துக்கு இரண்டு வேடங்கள். அப்பா, மகன். இதில் மகனுக்கு ஜோடி மீரா ஜாஸ்மின். அப்பாவுக்கு ஜோடி தேடி வருகிறார்கள்.

விஜயகாந்த் வயதான கெட்டப் போட்ட எல்லாப் படங்களுமே ஹிட்டாம். அதனால் இதுவும் ஹிட் என படம் தொடங்கு மு‌ன்பே ஆருடம் சொல்கிறார்கள். ஆருடம் பலித்தால் அனைவருக்கும் நல்லது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

Show comments