மர்மயோகி - நவீன மயம்!

Webdunia
செவ்வாய், 24 ஜூன் 2008 (19:37 IST)
மர்மயோகி படம் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. பிரமிட் சாய்மீரா நிறுவனம் முதல் காப்பி அடிப்படையில் படத்தை தயாரிக்கிறது. ஹேமமாலினியிடம் கால்ஷீட் வாங்கி வைத்திருக்கும் கமல், கஜோலின் கால்ஷீட்டுக்கு முயன்று வருவதாக கேள்வி.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் படம் தயாராகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ரவி.கே. சந்திரனின் உதவியாளர் மர்மயோகிக்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கதை மர்மயோகி. பிரமாண்ட அரங்குகள் அமைக்க தேவைப்படும் விஸ்தாரமான இடங்களை புரொடக்சன் ஆட்கள் தேடி வருகிறார்கள்.

முற்றிலும் நவீன தொழில்நுட்பங்களை கையாள திட்டமிட்டுள்ளனர். இதற்காக ரெட் ஒன் கேமரா அமெரிக்காவிலிருந்து வரவுள்ளது. சூப்பர் 35 எம்.எம். கேமராவைவிட இது மிக நவீனமானது.

அடுத்த மாதம் நடைபெறும் படத்தொடக்க விழாவில் மேலும் பல ஆச்சரிய தகவல்களை எதிர்பார்க்கலாம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஆர் ரஹ்மான் சிறுபான்மையினர்.. ஜிவி பிரகாஷ் பெரும்பான்மையினரா? சீமான் கேள்வி

ஜனநாயகனுக்கு தேதி குறிச்சாச்சு! இந்த முறையாவது சொன்ன தேதியில் சாட்டைய வீசுவாரா?

பல்சரில் ஆவியா? ‘கருப்பு பல்சர்’ படம் எப்படி இருக்கிறது? இதோ விமர்சனம்

கல்கி 2 திரைப்படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. அவருக்கு பதில் தமிழ் நடிகையா?

ரஜினி - கமல் படத்தில் இணையும் பிரபலம்!.. அப்ப வேறலெவல்ல இருக்கும்!..

Show comments