காட்டுப்பயலுக்கு ஜோடி தயார்!

Webdunia
வெள்ளி, 20 ஜூன் 2008 (13:12 IST)
திமிரு, காளை என்று இரண்டு படங்கள். மூன்றாவது படத்தில் மற்றவர்களை நம்பாமல் தானே ஹீரோவாகியிருக்கிறார் தருண்கோபி. படத்தின் பெயர் காட்டுப்பயலே!

தருண்கோபியை ஹீரோவாக்கும் தைரியம் கோடம்பாக்கம் தயாரிப்பாளர்களுக்கு இல்லை. அதனால் மதுரா டாக்கீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தருண்கோபியே படத்தை தயாரிக்கிறார்.

திமிருவில் வெளுத்து வாங்கிய வைகைப் புயல் காட்டுப்பயலிலும் உண்டு. காமெடியன் கிடைத்த அளவுக்கு எளிதாக இல்லை கதாநாயகி சமாச்சாரம். ரீமா சென்னிடம் பேசி கால்ஷீட் வாங்கிவிட்டார் என்று தருண்கோபியின் நலம் விரும்பிகள் கூறுவதில் பலரு‌க்கும் நம்பிக்கையில்லை. என்றாலும், காட்டுப்பயலே ஹீரோயின் ரீமா சென் என்ற சேதி காட்டுத் தீயாக பரவிவிட்டது.

விரைவில் ரீமா சென்னிடமிருந்து இதுகுறித்து அறிக்கை வரலாம். அது தீயாகவும் இருக்கலாம், தித்திக்கும் தீயாகவும் இருக்கலாம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments