Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தநா 07 அல 4777 - இரு துருவங்களின் மோதல்!

Webdunia
புதன், 18 ஜூன் 2008 (18:49 IST)
இந்த நகரம் பணக்க ா ரர்களுக்கு மட்டுமே உரியது என்று நினைக்கும் ஒரு நபர். பணக்காரர்களால்தான் நாம் ஏழையாகவே இருக்கிறோம் என்று எரிச்சல்படும் இன்னொருவர். இந்த இரு துருவங்களும் சந்தித்தால்?

இந்தியில் டாக்ஸி நெ.9211 என்ற பெயரில் வெளியான இந்த கதையை தநா 07 அல 4777 என்ற பெயரில் ஜீ.வி. ஃபிலிம்ஸ் தமிழில் தயாரிக்கிறது. இந்தியில் நானா படேகர் நடித்த வேடத்தில் பசுபதி. ஜான் ஆபிரஷாம் கேரக்டரில் அஜ்மல். தவிர சிம்ரன், மீனாட்சி என இரு நாயகிகள்.

நேற்று நடந்த தொடக்க விழாவில், தமிழில் கதாசிரியர்கள் இல்லை, என்னை ஹீரோ என்று சொல்லிக்கொள்ள மாட்டேன், நானா படேகர் எனக்கு பிடித்த நடிகர் என்பதால் அவர் நடித்த வேடத்தில் நடிப்பதை பெருமை என்று சொல்ல மாட்டேன் என புரட்சி வார்த்தைகளாக உதிர்த்தார்.

படத்தின் பெயரில் வரும் 4777 எம்.ஜி.ஆரின் கார் நம்பர். இதை ஏன் வைத்தீர்கள் என்று கேட்டதற்கு, நாங்களும் எம்.ஜி.ஆர். விசுவாசிகள்தானே என்றார் படத்தை தயாரிக்கும் மகாதேவன் கணேஷ்.

ரீ-மேக் என்றாலும் கருவை மட்டும் உருவி புதிதாக காட்சிகள் அமைத்திருப்பதாகச் சொன்னார் இயக்குனம் லட்சுமிகாந்தன். தொடக்க விழா நடந்தாலும் படப்பிடிப்புக்கு கிளம்புவது என்னவோ அடுத்த மாதம்தானாம்.

டாக்ஸிக்கு ஏனிந்த தாமதமோ?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments