தங்கை கடனை அடைத்த சிம்ரன்!

Webdunia
சனி, 14 ஜூன் 2008 (17:27 IST)
கே.வி. குணசேகரன் என்ற தயாரிப்பாளருக்கு பணம் கொடுத்திருக்கிறார் சிம்ரன். இது தற்கொலை செய்து கொண்ட மோனலுக்காக சிம்ரன் செலுத்திய தொகை.

கே.வி. குணசேகரன் தனது படத்தில் நடிப்பதற்காக சிம்ரனின் தங்கை மோனலுக்கு எழுபத்தைந்தாயிரம் ரூபாய் அட்வான்ஸ் தந்தார். திடீரென்று மோனல் தற்கொலை செய்ய அந்த ப்ராஜெக்டே கைவிடப்பட்டது.

அக்கா என்ற முறையில் மோனலிடம் கொடுத்த எழுபத்தைந்தாயிரத்தை திருப்பித் தருவதாக வாக்களித்தார் சிம்ரன். ஆனால், குணசேகரன் நடையாக நடந்தும் சிங்கிள் பைசா பெயரவில்லை சிம்ரனிடமிருந்து. கல்யாணம், குடும்பம் குழந்தை என சிம்ரன் செட்டிலாக குணசேகரனும் ஓய்ந்து போனார்.

இந்நிலையில் சிம்ரன் மீண்டும் அரிதாரம் பூச, போராட்ட ஆயுதத்தை கையிலெடுத்தார் குணசேகரன். பிரச்சனை தயாரிப்பாளர்கள் சங்கம் செல்ல, அவர்கள் சிம்ரனை அழைத்து அறிவுரை சொன்னதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து எழுபத்தைந்தாயிரத்தில் பாதி பணத்தை முதல் தவணையாக தந்திருக்கிறார் சிம்ரன். மீதி பணமும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் குணசேகரன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments