தங்கர் இயக்கத்தில் திருமா?

Webdunia
செவ்வாய், 10 ஜூன் 2008 (13:36 IST)
ஒன்பது ரூபாய் நோட்டுக்குப் பிறகு தங்கர்பச்சானிடம் எந்தப் பேச்சுமில்லை. மேடை நாகரிகத்துக்காக, தங்கர்பச்சானின் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்று இளம் நடிகர்கள் சொன்னாலும், கதை சொல்ல தங்கர் கதைவை தட்டும் முன்பே எஸ்ஸாகி விடுகின்றனர். சத்யராஜே சாலச் சிறந்தவர் என அவருக்காக தங்கர் கதை பண்ணுகிறார் என்று பலமான பேச்சு.

ஆனால், இவையனைத்தையும் பத்திரக்கோட்டை மண்ணின் மைந்தன் பொய்யாக்கப் போகிறாராம். ஆம், தங்கர்பச்சானின் புதிய படத்தின் ஹீரோ திருமாவளவன்!

திருமாவின் திரை முயற்சிகள் எதுவும் வெற்றிகரமாக உருமாறவில்லை. இது திருமாவுக்கும் அவரது விசுவாசிகளுக்கும் உறுத்தலாகவே இருந்து வருகிறது. பெரிதாக அறிவிக்கப்பட்ட கலகமும் கைவிடப்பட்ட நிலை.

தமிழ் சமுதாயத்தையே புரட்டிப் போடும் கதையில் திருமா நடித்தால் நன்றாக இருக்கும் என தங்கர் விரும்புகிறாராம். அதற்கேற்ப ஒரு கதையை சொந்த ஊரில் உருவாக்கி வருகிறாராம். நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து கசிந்த இந்தத் தகவல் உண்மையானால், திருமாவின் திரை முயற்சிக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments