வில்லு - முதல் கோணல்!

Webdunia
ஞாயிறு, 8 ஜூன் 2008 (16:15 IST)
விஜயின் வில்லு பட ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் மீது கவுன்சலில் புகார் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்!

இவரது தயாரிப்பில் ரவிவர்மன் மாஸ்கோவின் காவிரி படத்தை புதுமுகங்களை வைத்து இயக்கினார். படம் இன்னும் முடியவில்லை.

ரவிச்சந்திரனின் புகாரின்படி படப்பிடிப்பு, டப்பிங், பின்னணி இசை என எதுவும் முடியவில்லை. இதனை முடித்துவிட்டு வேறு படத்துக்கு ரவிவர்மன் செல்லட்டும் என்கிறார் ரவிச்சந்திரன்.

கவுன்சில் விளக்கம் கேட்டதற்கு, வில்லு படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு பதினைந்து நாட்களுக்குள் மாஸ்கோவின் காவிரி வேலைகளை ஆரம்பித்து விடுகிறேன் என்றிருக்கிறார் ரவிவர்மன். இந்த விளக்கத்தை கவுன்சில் ஏற்கவில்லை எனத் தெரிகிறது.

இதனால் படப்பிடிப்பை தொடங்கிய முதல்நாளே பிரச்சனையை சந்தித்திருக்கிறது விஜயின் வில்லு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

Show comments