எளிமையாக நடந்த 'அகம்புறம்' பூஜை!

Webdunia
வெள்ளி, 6 ஜூன் 2008 (19:44 IST)
பெரிய வி.ஐ.பி.கள் இல்லாமல் அகம்புறம் பூஜை நடந்ததே அகம் மகிழ்வாக இருந்தது. தாடி எடுத்த ஆர்யா மட்டுமே ஸ்பெஷல் கெஸ்ட்.

சம்பிரதாய பூஜை முடிந்ததும் ஷாமும், இயக்குனர் திருமலையும் படம் குறித்துப் பேசினர்.

நேர்மையை மதிக்காத உலகில் குறுக்கு வழியில் கோடீஸ்வரணாகும் திரு என்பவனின் கதையே அகம்புறம். திருவாக ஷாம். இவருக்கு இரண்டு ஜோடிகள்.

முரட்டு இளைஞன், ட்ரக் அடிக்ட், சாஃப்ட்வேர் நிறுவனர் என முப்பரிமாண நடிப்பை வெளிப்படுத்தும் வேடமாம் ஷாமிற்கு. படத்தில் கே. சுபாஷ், பேரரசு, ஆர்.வி. உதயகுமார், திருமலை என நான்கு இயக்குனர்கள் பாடல் எழுதுகிறார்கள். திருஷ்டிக்கு ஒரேயொரு பாடலாசிரியர், மஞ்சக்காட்டு மைனா பாடலை எழுதிய இளங்கோ.

பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கி வெகு விரைவில் படத்தை முடிக்கயிருப்பதாகக் கூறினார் திருமலை. அவரது வேகம் ஷாமிடமும் பிரதிபலித்தது.

அகம் புறம்... ஜெயம் நிஜம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments