எங்கெங்கிலும் அவதாரம்!

Webdunia
வெள்ளி, 6 ஜூன் 2008 (13:57 IST)
உங்களுக்கு ஏதேனும் படம் பார்க்க விருப்பமா? ஆம் என்றால் அந்த ஆசையை பதிமூன்றாம் தேதிக்குள் தீர்த்துக் கொள்ளுங்கள். பிறகு தேடினாலும் கிடைக்காது உங்கள் விருப்பப்படம்.

இந்த பயமுறுத்தலுக்குக் காரணம் இருக்கிறது. பதிமூன்றாம் தேதி வெளியாகும் தசாவதாரம் சென்னை சிட்டியில் மட்டும் 20 திரையரங்குகளில் வெளியாகிறது. புறநகரையும் சேர்த்தால் எண்ணிக்கை முப்பதாகிவிடும்.

இதுதவிர மாயாஜால் காம்ப்ளக்ஸில் தினம் 50 காட்சிகள் திரையிட திட்டமிட்டுள்ளனர். அனைத்தையும் கூட்டிக் கழித்தால் சென்னை நகரில் மட்டும் தினம் 137 காட்சிகள்! சிவாஜியைவிட இது பலமடங்கு அதிகம். பத்து நாட்கள் படம் அரங்கு நிறைந்தாலே காஜானா நிரம்பிவிடுமாம்.

தவிர, படத்தின் முதல் நாள் வசூல் இதுவரை வெளியான தென்னிந்திய மொழி திரைப்படங்களைவிட பல மடங்கு அதிகமிருக்கும் என அடித்துச் சொல்கிறார்கள். திரையரங்கின் எண்ணிக்கையை பார்க்கும்போது, ஆமாம் சொல்வதைத் தவிர வேறு வழியிவல்லை!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கைவிட்ட நீதிமன்றம்... ஜனநாயகனுக்கு அடுத்த அடி!.. தள்ளிப்போகும் ரிலீஸ்!..

நாய் குறைக்கும் போது என்னதான் நடந்தது? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கம்ருதீன்

துபாயில் வீடு வாங்கும் சிம்பு!.. விலை என்ன தெரியுமா?!...

ரஜினி - கமல் படம் டேக் ஆப் ஆகாமல் போனது ஏன்?.. ஓப்பனாக பேசிய லோகேஷ்!..

பழுதடைந்த சார்ஜர் கொண்ட மொபைல் ஃபோன்.. மாதவிடாய் நின்ற காலத்தினை ஒப்பிட்ட பிரபல நடிகை..

Show comments