பேரரசுவின் 'பாச' சென்டிமெண்ட்!

Webdunia
திங்கள், 2 ஜூன் 2008 (20:47 IST)
ஊர் பெயர்களைப் படத்தின் தலைப்பாக வைப்பதில் கில்லாடியான இயக்குனர் பேரரசு. சிவகாசி, திருப்பாச்சி, திருப்பதி, பழனி என்ற ஊர் பட்டியலில் தற்போது இடம்பிடித்த ஊர் 'திருவண்ணாமலை'. அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார்.

ஊர் பெயர்களை தலைப்பாக வைப்பதில் எப்படி ஒரு கொள்கை வைத்திருக்கிறாரோ, அதேபோல கதைகளிலும் ஒரே பாணி வைத்திருப்பவர். ஒரு படத்தில் ஹீரோ அம்மா மீது அளவு கடந்த பாசம் வைத்தால்... அடுத்தடுத்து படங்களில் அக்கா மீது அல்லது தங்கை மீது என்று பாசம் இடம்மாறுமே தவிர கதை மாறவே மாறாது.

ஆனால், தற்போது இயக்கும் திருவண்ணாமலை படத்தின் கதை மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்கிறார். அதாவது, சமுதாய மக்கள் மீது பாசம் கொண்ட ஹீரோ அவர்களின் பிரச்சனைகளை எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதுதான் கதையின் மையக் கருத்து.

மேலும் "தன்னிடம் மக்கள் இப்படி கமர்ஷியலாகத்தான் எதிர்பார்க்கிறார்கள், அதனால் அப்படிப்பட்ட படங்களை இயக்கி வருகிறேன். எனக்காக சில ஆத்மார்த்தமான கதைகள் உள்ளது. அந்தக் கதைகளை இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின் இயக்குவேன். ஆனால் தயாரிப்பாளர் வேறொருத்தராக இருக்க வேண்டும். கண்டிப்பாக சொந்தமாக படங்களைத் தயாரிக்கமாட்டேன்" என்று சொல்லும் பேரரசு, அதில் உறுதியாக இருக்கிறார். பேரரசு என்றால் 'உஷார்' என்று பொருள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி வச்சாச்சி!.. தீர்ப்பு எப்போது தெரியுமா?!..

சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?

பாராட்டுக்களை பெற்றுள்ள மாயபிம்பம்!.. படம் எப்படி இருக்கு?.. திரை விமர்சனம்!...

ஆறு வருஷமா வெயிட் பண்ணி! சிம்புவுக்காக காத்திருந்து.. உஷாரான தேசிங்கு பெரியசாமி

Show comments