கார்ப்பரேட் கம்பெனிகளும் அலையவிடுகின்றன!

Webdunia
திங்கள், 2 ஜூன் 2008 (17:54 IST)
ஒரே நேரத்தில் பத்துப் படங்களை தயாரிக்கும் முடிவில் பிரமாண்ட விழாவை நடத்தியது பிரமிட் சாய்மீரா நிறுவனம். நலிந்த பத்து தயாரிப்பளர்களை தேர்வு செய்து, அந்த விழா மேடையிலேயே பத்து தயாரிப்பாளர்களுக்கும் முதல் தவணையாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

இப்படி ஆரம்பிக்கப்பட்ட படத்தில் மூன்று தயாரிப்பாளர்களுக்கு இயக்குனர்கள் அறிவிக்கப்படவில்லை. மற்ற ஏழு தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே இயக்குனர்கள் யார்... யாரென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது இரண்டு படங்கள் மட்டுமே படப்பிடிப்பில் உள்ளது.

தெய்வானை மூவிஸ் மூலம் ஜேப்பி அழகர் இயக்கும் 'வானம் பார்த்த சீமையிலே' படமும், சங்கிலிமுருகன் தயாரிப்பில் 'பொன்மனம்', 'என் புருஷன் குழந்தை மாதிரி' ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி. ராஜ்குமார் இயக்கத்தில் 'அழகர்மலை' படமும்தான். மற்ற படங்களைப் பற்றிய செய்திகள் எதுவும் வெளிவரவில்லை.

இதனிடையே இன்னும் பத்துப் படங்களைத் தயாரிக்கும் முடிவில ் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு ஓ.கே. சொல்லி வைத்துள்ளது பிரமிட் சாய்மீரா நிறுவனம். முதல் படங்களுக்கு வழியில்லை, இரண்டாவது செட் படங்கள் நடக்குமா? என்ற கவலையில் கம்பெனிக்கு நடையாய் நடந்து வருகின்றனர் இரண்டாவது செட்டில் கதை சொன்ன இயக்குனர்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments