பயிற்சி எடுக்கும் விஜயகாந்த்!

Webdunia
திங்கள், 2 ஜூன் 2008 (16:21 IST)
' மதுர' மாதேஷ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'அரசாங்கம்'.

இதையடுத்து விஜயகாந்த் நடிக்கும் படம் 'எங்கள் ஆசான்', சுந்தரா டிராவல்ஸ் படத்தை தயாரித்த எஸ்.வி. தங்கராஜ் தயாரிக்க, தங்கதுரை இயக்குகிறார். பொதுமக்களுக்கு நன்மை செய்யும் பாத்திரத்தில் நடிக்கவே பிரியப்படும் விஜயகாந்த், இந்தப் படத்திலும் அதுபோன்ற கேரக்டரில்தான் நடிக்கிறார்.

அதாவது பேங்க் மேனேஜராக வேடமேற்று நடிக்கும் இவர், தனக்கு தெரிந்த பேங்க் அதிகாரிகளை நேரில் சந்தித்து வங்கியில் நடக்கும் விதிமுறைகளை கேட்டுத் தெரிந்துகொள்கிறார். அத்தோடு மட்டும் இல்லாமல் வங்கிக்கும் நேரில் சென்று பார்த்து வருகிறார்.

பொதுமக்களின் பணத்தை போல ி பத்திரம், போலி கையெழுத்து மூலம் கொள்ளையடிக்கும் சில சமூக விரோதிகளை தட்டிக் கேட்டு திருத்துவதுதான் இவரின் வேலை என்பதால் அதுபற்றிய விபரங்களை கேட்டு தெரிந்துகொள்வது மூலம் நன்றாக ஒன்றிப்போய் நடிப்பதுடன், நாளை அரசியல் மீட்டிங்குகளிலும் அதுபற்றி ஆளுங்கட்சியைக் கேள்வி கேட்டு மடக்கலாம் இல்லையா! அதற்காகவும்தான் இத்தனை கரிசனம் காட்டுகிறார் கேப்டன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெய்பீம் இயக்குனருடன் மீண்டும் இணையும் சூர்யா!.. பரபர அப்டேட்!..

மாசம் 1.5 கோடி வட்டி.. வாழ்க்கை செட்டில்! நயன்தாரா கணவர் போடும் 350 கோடி மாஸ்டர் பிளான்

1 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய தமன்னாவின் மனு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

என்னை சூனியக்காரி என்று அழைத்தனர்: முன்னாள் காதலர் மீது கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு..!

ஜனநாயகன் லீக்!. ஸ்டுடியோவில் நுழைந்த வீடியோ எடிட்டர்!.. முக்கிய குற்றவாளி கைது!..

Show comments