பாவனா - நிறைவேறிய ஆசை!

Webdunia
வியாழன், 29 மே 2008 (19:38 IST)
பருத்தி வீரனில் தகரக் குரல் ப்ரியாமணியை சொந்தக் குரலில் அமீர் பேச வைத்தாலும் வைத்தார். பேசினால் சொந்தக் குரல்தான் என கொடி தூக்க ஆரம்பித்துவிட்டனர் இடி போன்ற குரல் இருக்கும் நடிகைகள்.

webdunia photoWD
பாவனா அதில் ஒருவர். பார்க்க கொடி போலிருக்கும் இவரது குரலில் மென்மைக்கு பதில் வன்மையே அதிகம் தொனிக்கும். ஜலதோஷத்தால் அடைத்தது போன்ற குரல் இவருடையது. இந்தக் குரலை வைத்து டப்பிங் பேசுவேன் என அடம்பிடித்து, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

வினயுடன் பாவனா நடித்திருக்கும் ஜெயம் கொண்டானில் சொந்தக் குரலில் பேசியிருக்கிறார் பாவனா. இதில் மிளகாய் மண்டி வைத்திருப்பவரின் மகளாக நடித்துள்ளார் பாவனா. கேரக்டரில் மட்டுமின்றி குரலிலும் கொஞ்சம் காரம் இருந்தால் நல்லது என இயக்குனர் கண்ணன் நினைத்திருக்கலாம்.

ஆனால், கேட்கப் போவது நம்முடைய காது அல்லவா!

விஜய்யின் ‘சுறா’ உள்பட பல படங்கள் நடித்த நடிகர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

விஜய் சார் மூலம் 'பகவந்த் கேசரி' படத்தின் கதையை பார்க்க ஆவலுடன் உள்ளேன்: ஸ்ரீலீலா

தனுஷ் உடன் மீண்டும் இணையும் வெற்றி பட இயக்குனர்.. பிரம்மாண்டமான பீரியட் ஆக்ஷன் திரைப்படம்!

இறுதிப் போட்டியில் 2 போட்டியாளர்கள் உறுதி.. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ்..!

Show comments