கௌதமின் ஆஸ்தான நடிகர்!

Webdunia
புதன், 28 மே 2008 (19:41 IST)
படத்துக்குப் படம் கேமராமேனை மாற்றுவார். ஹீரோக்களும் மாறுவார்கள். அறிமுகமானது முதல் மாறாமலிருந்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜையும் மாற்றினார். கௌதமிடம் மாறாமலிருப்பது ஒரேயொருவர், டேனியல் பாலாஜி.

காக்க காக்க படத்தில் போலீஸ் அதிகாரி. வேட்டையாடு விளையாடுவில் சைக்கோ வில்லன். இதோ, மீண்டும் கௌதமின் சென்னையில் ஒரு மழைக்காலத்தில் டேனியல் பாலா‌ஜி. இதில் வேட்டையாடு விளையாடு போலவே சைக்கோ கதாபாத்திரம்.

முத்திரை படத்தில் ஹீரோவாக நடித்து வரும்போது, இப்படி சைக்கோ வில்லனாக நடித்தால் எப்படி என்ற சராசரி யோசனையெல்லாம் டேனியலிடம் கிடையாது. நடிகன் என்பவன் நல்ல கதாபாத்திரம் எதிலும் நடிக்கலாம். நல்லவனாக மட்டும் நடிப்பேன் என்று அடம் பிடிப்பதில் அர்த்தம் இல்லை என்கிறார் தெளிவாக!

டேனியலுடன் படத்தில் நிகிதா, நேத்ரா என்ற இரு புதுமுகங்களும் நடிக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்ஸ்டாவில் ஃபாலோயர்ஸ அதிகமாக்க நடிகர் செஞ்ச வேலை! இவருக்கா இந்த நிலைமை?

சின்ன மருமகள் சீரியலில் இருந்து திடீரென தூக்கப்பட்ட பிக்பாஸ் தாமரை.. என்ன நடந்தது?

1000 கோடி வியாபாரம்!..! ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு கை கொடுத்த Toxic!...

ஜனநாயகன் ரிலீஸ் எப்போது என்று தெரியவில்லை.. ஆனால் தெறி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தவறு செய்தவர்களை ஐயப்பன் சும்மா விட மாட்டார்.. நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் ஜெயராம் பேட்டி..!

Show comments