தரணிக்கு டாட்டா!

Webdunia
புதன், 21 மே 2008 (16:39 IST)
தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் தரணி. கடைசியாக இயக்கிய பங்காரமும், குருவியும் கில்லி பெயரை சிதறடித்துவிட்டன.

மீண்டும் தன்னை நிரூபிக்க, விக்ரம், விஜய் மாதிரி ஒரு ஹீரோ தரணிக்கு வேண்டும்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற வீணாகப் போன படத்தில் நடித்து சேது பெயரை விக்ரம் கெடுத்த நேரம், தில் படம் தந்து தோள் கொடுத்தவர் தரணி.

நண்பனை நாடிப் போனார் தரணி. நண்பனின் நோக்கம் அறிந்தும், கால்ஷீட் இல்லை அப்புறம் பார்க்கலாம் என டாட்டா காட்டி கிளம்பியிருக்கிறார் விக்ரம்.

கையறு நிலையில் தெலுங்கில் காலூன்ற ஆலோசித்து வருகிறாராம் தரணி.

சினிமாவில் நட்பும் மாயை, வெற்றியும் மாயை!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்காளி சீனிவாசன் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!..

3 வேளை சோத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு!" - யோகி பாபுவிடம் எமோஷனலான விஜய்!

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

Show comments