வடிவேலு - மீண்டும் ஹீரோ!

Webdunia
புதன், 21 மே 2008 (14:56 IST)
webdunia photoWD
இந்திரலோகத்தில் எதிர்பாராத அடியால், ஹீரோ ஆசைக்கு வடிவேலு போட்டிருந்த அணையை மோதி உடைத்திருக்கிறது ஒரு கதை!

துப்பறியும் சாம்பு எந்தப் பிரச்சனையில் மூக்கை நுழைத்தாலும் அது அவருக்கு சாதகமாக முடியும். சாம்பு கேரக்டரை அப்படியே திருப்பிப் போடுங்கள்.

ஒரு தொழில்முறை கொலைகாரன். அவன் எதைத் தொட்டாலும் ரிவர்ஸாகி, அவனுக்கே ஆப்பாகிவிடும். இந்த ஒருவரி கேரக்டர்தான் வடிவேலுவை கவிழ்த்திருக்கிறது.

இந்திரலோகத்துக்கு மாறாக, இதில் இரண்டரை மணி நேரமும் ஒரே காமெடி தீபாவளிதானாம். தொலைக்காட்சியில் மாயாவி மாரிசன் தொடரை இயக்கிய ராஜு ஈஸ்வரன்தான் இந்த சிரிப்பு கொலைகாரன் கேரக்டரை உருவாக்கியது.

திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தயாரிக்க ராஜு ஈஸ்வரன் படத்தை இயக்குகிறார். வடிவேலுக்கு இந்திரன் தராத வெற்றியை இந்த கொலைகாரன், தருவானா, பார்ப்போம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போட்டி வேணானு ஒதுங்கிய அஜித்! ஆசைப்படும் சிவகார்த்திகேயன்.. சூடுபிடிக்கும் விஜயுடனான மோதல்

புத்தாண்டில் தங்கம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. இன்று ஒரே நாளில் ரூ.320 குறைவு..!

ரோம் நகரில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா.. வைரல் புகைப்படங்கள்..!

விஜயிடம் அப்படி என்ன லட்டர் கொடுத்தீங்க? ஆடியோ லாஞ்சில் நடந்த சம்பவம்

‘கோட்’ படத்திற்கு பிறகு மீண்டும் கேமியோ ரோலில் கலக்கும் சிவகார்த்திகேயன்! அவரா ஹீரோ?

Show comments