அமெரிக்காவில் ஆனந்த தாண்டவம்!

Webdunia
செவ்வாய், 20 மே 2008 (19:20 IST)
ஆஸ்கர் மூவிஸ் தயாரிக்கும் ஆனந்த தாண்டவத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற உள்ளது. ஏ.ஆர். காந்தி கிருஷ்ணா இயக்கும் இப்படத்தின் கதை, மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது. நாவலின் பெயர் பிரிவோம் சந்திப்போம்.

இரண்டு இன்ஜினியர்களின் வாரிசுகளுக்கு நடுவில் உருவாகும் காதலைச் சொல்லும் படம் இது. (அரவிந்த்சாமி, மாதுரி தீட்சித் நடிக்க இன்ஜினியர் என்ற பெயரில் படம் தொடங்கப்பட்டு பாதியில் நின்றது. அந்தப் படத்தை இயக்கியதும் இதே ஏ.ஆர். காந்தி கிருஷ்ணாதான்).

படத்தின் பிற்பகுதி கதை அமெரிக்காவில் நடக்கிறது. இதற்காக ஹீரோ சித்தார்த், ஹீரோயின் தமன்னா உள்ளிட்ட ஆனந்த தாண்டவம் டீம் ஜூன் 1 அமெரிக்கா செல்கிறது. தசாவதாரம் வெளியான பிறகே ஆனந்த தாண்டவம் திரைக்கு வரும் என தெரிகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏன் விஜய் வாயை திறக்கல? பூகம்பமாகும் த்ரிஷா விவகாரம்.. எங்க போய் முடியப் போகுதோ?

தமிழக அரசு விருதை வாங்க மறுத்த வெற்றிமாறன்!.. நடந்தது என்ன?

நீங்க கதையே சொல்ல வேணாம்!. நான் நடிக்கிறேன்.. லோகேஷ் கனகராஜூ

சூர்யாவுடன் இணையும் டிராகன் பட இயக்குனர்!.. புதுப்பட அப்டேட்!...

இன்ஸ்டாவில் ஃபாலோயர்ஸ அதிகமாக்க நடிகர் செஞ்ச வேலை! இவருக்கா இந்த நிலைமை?

Show comments