ஆகஸ்டு 15 வாரணம் ஆயிரம்!

Webdunia
செவ்வாய், 20 மே 2008 (16:20 IST)
கெளதம் மேனனின் ரசிகர்களுக்கு இது கவலையளிக்கும் செய்தி. அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வாரணம் ஆயிரம் இப்போதைக்கு வெளிவருவதாக இல்லை.

சூர்யா பல்வேறு வயதுகளில் தோன்றும் பிரமாண்டமான படம் வாரணம் ஆயிரம். சமீரா ரெட்டி, திவ்யா என இரண்டு நாயகிகள். ஹாரிஸ் ஜெயராஜ் இசை.

காக்க காக்க கூட்டணியின் இந்தப் புதிய படத்திற்கு கமல், ரஜினி படம் அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. போர்ஷன் ஏறக்குறைய முடிந்துவிட்டது. அடுத்து கே.வி. ஆனந்தின் அயனில் நடிக்க தயாராகிவிட்டார் சூர்யா.

பாக்கி போர்ஷன் முடிந்தாலும் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் இருப்பதால், படம் வெளிவர இன்னும் மூன்று மாதங்கள் ஆகுமாம். ஆகஸ்ட் 15 ஆம் தேதி படத்தை எதிர்பார்த்தால் போதும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் தரப்பில்.

கிடைப்பது உறுமீன் என்றால் காத்திருப்பதில் நஷ்டமில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

ரஜினி படம் ஸ்டார்ட்!.. போட்டோ போட்டு செம ஹைப் ஏத்துறாங்களே!...

Show comments