Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாமியின் சரண்டர்!

Webdunia
வெள்ளி, 16 மே 2008 (19:39 IST)
உயரப் பறந்தாலும் இரை தின்ன தரைக்குதான் வந்தாக வ §ண்டும் ஊர்க் குருவி. சாமியின் சரண்டரை பார்க்கும் போது ஊர் குருவி கதைதான் நினைவு வருகிறது.

மிருகம் படப்பிடிப்பில் பத்மப்ரியாவுக்கு பளார் கொடுத்து, மன்னிப்பு, தடை என்று ஆறு மாசம் வனவாசம் இருந்தார் சாமி. ஆறு மாதத்திற்குப் பின் விடுதலை. விறுவிறு என்று சரித்திரம் ஸ்கிரிப்டை தயார் செய்துள்ளார்.

ராஜ்கிரண், ஆதி என நாயகர்கள் பக்கம் பக்கா க்ளீன். வழக்கம் போல் நாயகிதான் தகராறு. அதுவும் சாமி படத்துக்கு, அந்த சாமியே வரம் தந்தால் தான் உண்டு. காரணம் இல்லால் இல்லை.

சரித்திரம் நாயகி யானை வளர்ப்பவர், நன்றாக சிலம்பம் சுற்றுகிறவள். உயரமாக ஆண்களுடன் ஒண்டிக்கு ஒண்டி நிற்பவள். சாமி சொல்லும் சைஸுக்கு ஒத்துவரும் ஒரே இந்திய நடிகை பத்மப்ரியா. வேறு வழியின்றி பத்மப்ரியாவுக்கு தூது அனுப்பினார் சாமி. இதற்காகவே காத்திருந்தவர் போ‌ல் சாமியின் தூதுக்கு கதவடைத்து கரி பூசியிருக்கிறார் பத்மப்ரியா.

யானை வளர்க்கும் நாயகி பூனை வளர்ப்பது போல் கதையில் மாற்ற முடியாது என்பதால், பத்திரிக்கை வாயிலாக பத்மப்ரியாவுக்கு பகிரங்க அழைப்பு விடுத்திருக்கிறார் சாமி.

சாமிக்கு வரம் கொடுப்பாரா பத்மப்ரியா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments