மான்யா - கைகூடிய காதல்!

Webdunia
வெள்ளி, 9 மே 2008 (17:53 IST)
நடிகைகளின் காதலுக்கு ஆயுள் ரேகை கம்மி. பெரும்பாலும் கல்யாணம் என்று வரும்போது ரேகை அழிந்துவிடும். ஒருசிலர்தான் விதிவிலக்கு. உதாரணம் சொல்வதென்றால் நடிகை மான்யாவை சொல்லலாம்.

' குஸ்தி', 'நைனா' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்த மான்யா, சத்யா படேல் என்பவரை காதலித்து வந்தார். நடிகைகளின் குல வழக்கப்படி இவரும் ஒரு அமெரிக்க வாழ் இந்திய தொழிலதிபர்.

இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் ஆச்சரியப்படும்படி எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. அதனால் இம்மாதம் 31 ஆம் தேதி இருவரும் கல்யாண பந்தத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறார்கள்.

நடிகைக்கு திருமணம் என்றதும் அடுத்துவரும் கேள்வி, திருமணத்திற்குப் பின் நடிப்பீர்களா? மான்யாவின் பதில், கண்டிப்பாக! நல்லவேளை, கலையுலகம் பிழைத்தது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இறுதிப் போட்டியில் 2 போட்டியாளர்கள் உறுதி.. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ்..!

ஒருவழியாக சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டது.. ‘ஜனநாயகன்’ படக்குழு நிம்மதி பெருமூச்சு..!

'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் காலமானார். சந்தானம் இரங்கல்..!

சம்பள பிரச்சனை காரணமாக படத்தில் இருந்து நீக்கப்பட்ட நயன்தாரா! சூப்பர் கேரக்டர் ஆச்சே

இன்று ஆஸ்கர் நாயகன், 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் 59-வது பிறந்த நாள்.. ரசிகர்கள் வாழ்த்து..

Show comments